ரணிலின் பாதுகாப்பு தொடரணியை புகைப்படம் எடுத்த இளைஞன் கைது!
#SriLanka
#Vavuniya
#Ranil wickremesinghe
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
வவுனியா விமானப்படைத் தளத்தை புகைப்படம் எடுத்த சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா விமானப்படைத் தளத்தினூடாக ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில் வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்று கெண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்தமையை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த இளைஞன் பூனாவ பகுதியைச் சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.