வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட வர்த்தமானியை நீக்கக்கோரிக்கை!

#SriLanka #NorthernProvince #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட  வர்த்தமானியை  நீக்கக்கோரிக்கை!

வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்து வெளியான வர்த்தமானி அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இந்த கோரிக்கையை விடுத்திருந்ததாக சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு குறித்த வர்த்தமானி அறிவித்தலை நீக்குவதாக ஜனாதிபதி உறுதியளித்த போதும் அதனை இதுவரை மீள பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

images/content-image/1704516201.jpg

இதேநேரம் 14 இந்து ஆலயங்களுக்கும் மக்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கவும் அப்பகுதியில் உள்ள விவசாய கணைகளை விடுக்கவும் ஜனாதிபதியிடம் கோரியதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி உடனடியாக இந்த விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்றும் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!