அதிகரித்தது வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பணத்தொகை!
#SriLanka
#Lanka4
#money
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
வெளிநாட்டு பணியாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணத் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட தொகை 57.5% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் வெளிநாட்டு பணியாளர்களினால் 567.7 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டு குறித்த பணியாளர்களினால் அனுப்பப்பட்ட தொகை 5.5 பில்லியன் அமெரிக்க டொலராகவும் 2022 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட தொகை 3.8 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.