தமிழர் பகுதியில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட நிரந்தர இராணுவ முகாம்!

#SriLanka #Vavuniya #Lanka4 #Sri Lankan Army #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
தமிழர் பகுதியில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட நிரந்தர இராணுவ முகாம்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று இரவு வேளையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ காவலரனொன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

அதன் பின்னரும் குறித்த காவலரண் அகற்றப்படாத நிலையில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கனரக வாகனங்கள் சகிதம் சென்ற இராணுவத்தினர் குறித்த பகுதியில் நிரந்தரமாக பாரியளவிலான இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

 இதன் காரணமாக பயணிகளும் குறித்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அச்சத்துக்குள்ளாகியுள்ள நிலையில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கோரியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!