புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்றக் குழுக் கூட்டம் குறித்து வெளியான அறிவிப்பு!

#SriLanka #Parliament #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்றக் குழுக் கூட்டம் குறித்து வெளியான அறிவிப்பு!

புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் நாளை (09.01) நடைபெறவுள்ளது. 

நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை  கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இதன்படி, நாளைய தினம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம், தேசிய நீரியல் சட்டமூலம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2355/30 இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவுகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. 

நீதிமன்றம், நீதித்துறை அதிகாரம் அல்லது நிறுவனத்தை அவமதிக்கும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பாக 2023 நவம்பர் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட விவாதம் ஜனவரி 10 ஆம் திகதி இரண்டாம் நாள் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வியாழன் அன்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன், தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணைகளை முன்வைப்பதற்கு 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!