இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Rain #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்  இன்று (10.01) மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கு  மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நள்ளிரவு 1 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளாகவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மின்னலினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4