கனடாவில் விமானத்தின் கதவைத்திறந்து கீழே விழுந்த பயணி

#Canada #Lanka4 #AirCraft #Passenger #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 canada tamil news
கனடாவில் விமானத்தின் கதவைத்திறந்து கீழே விழுந்த பயணி

கனடாவில் விமானக் கதவை திறந்து பயணியொருவர் கீழே வீழ்ந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ரொறன்ரோவிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்க ஆயத்தமான நியைில் பயணி கீழே வீழ்ந்துள்ளார்.

 விமானத்தின் அவசர வெளியேறல் கதவை பயணி ஒருவர் திறந்துள்ளார். எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான AC056 என்ற விமானத்திலிருந்து குறித்த பயணி கீழே வீழ்ந்துள்ளார்.

images/content-image/1704960894.jpg

 விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கீழ் கலவைக்குள் பயணி வீழ்ந்து காயமடைந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடாபில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பயணி கீழே வீழ்ந்து காயமடைந்த காரணத்தினால் விமானப் பயணம் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.

 எதனால் பயணி விமானத்தின் கதவை திறந்தார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4