“அயலகத் தமிழர் தினம் 2024” விழாவிற்கு வரவேற்கப்பட்ட செந்தில் தொடண்டமான் மற்றும் சாணக்கியன்!

#India #SriLanka #shanakiyan #Lanka4 #SenthilThondaman #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
“அயலகத் தமிழர் தினம் 2024” விழாவிற்கு வரவேற்கப்பட்ட செந்தில் தொடண்டமான் மற்றும் சாணக்கியன்!

தமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக, தமிழக அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்னை தமிழ்நாடு அரசின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வரவேற்றுள்ளார்.

இதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்றும் நாளையும் சென்னை வர்த்தக மையத்தில் குறித்த நிகழ்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா சென்றடைந்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரை, தமிழக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேரடியாகச் சென்று வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!