அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகி நேற்று உலகளவில் வெளிவந்த திரைப்படம் கேப்டன் மில்லர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தெரியவந்துள்ளது.
அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 14 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக முத்திரை பதித்தவர் ரவிக்குமார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி பெரும் போராட்டத்திற்கு மத்தியில் நேற்று வெளிவந்த திரைப்படம் தான் அயலான்.
இந்நிலையில், அயலான் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக இனி வரும் நாட்களில் அயலான் வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



