கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியவர்களில் 15 பேர் காணாமல்போயுள்ளதாக தகவல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#lanka4_news
Thamilini
2 years ago
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 15 கைதிகளைத் தவிர ஏனையோர் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
புனர்வாழ்வு நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் குழுவிற்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் கைதிகள் குழுவொன்று காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு குழுவினர் தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 05 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.