கனடாவில் வீடுகளை கொள்வனவு செய்த இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
#SriLanka
#Canada
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#House
#lanka4Media
Dhushanthini K
1 year ago

கனடாவின் Ontario மாகாணத்தில் வீடுகளின் விலை மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதன்படி ஆரம்பகாலத்தில் சாதாரணமாக சிறிய தொகையை கொடுத்து வீடுகளை கொள்வனவு செய்தவர்கள் தற்போது அங்கு இலட்சாதிபதியாக மாறியுள்ளனர்.
குறிப்பாக ஆரம்பகாலங்களில் 06 இலட்சம் டொலர்களுக்கும் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட வீடுகளின் தற்போதைய பெறுமதி 20 இலட்சம் டொலர்களாக காணப்படுகிறது.
அங்குவாழும் தமிழர்கள் இவ்வாறாக இரண்டு, வீடுகளை கொள்வனவு செய்துள்ளதுடன், ஒரு வீட்டினை வாடகைக்கு விட்டும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
குறைந்தபட்சம் அங்கு அவர்கள் கொள்வனவு செய்த வீட்டின் இலங்கை பெறுமதி ஏறக்குறைய 50 கோடி இருக்கும். ஆகவே அங்கு வாழும் இலங்கையர் ஒருவர் கனடாவை விட்டு வெளியேறும் பட்சத்தில் அவர் 50 கோடியுடன் தான் இலங்கை வருவார்.
அவர் இங்கு ஆடம்பரமான வாழ்க்கையை வாழக்கூடியதாக இருக்கும்.



