பாணந்துறையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர் பத்திரமாக மீட்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Panadura
Thamilini
2 years ago
பாணந்துறையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர் பத்திரமாக மீட்பு!

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர்கள் குழுவொன்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் படுனர பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். 

25 மற்றும் 19 வயதுடைய இரு யுவதிகளும், 17  மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாணந்துறை வர்த்தக வலயத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் நிமல்சிறி, பொலிஸ் கான்ஸ்டபிள் புஷபகுமார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தேஷான் ஆகியோரினால் குறித்த நால்வரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 மீட்கப்பட்ட 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லாததால் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4