வைத்தியசாலையில் களமிறக்கப்பட்டுள்ள முப்படையினர்!

#SriLanka #Hospital #Lanka4 #Soldiers #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வைத்தியசாலையில் களமிறக்கப்பட்டுள்ள முப்படையினர்!

வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  

சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய முப்படையினரும் வைத்தியசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இதன்படி இன்று காலை 06.30 மணி முதல் சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. 

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், அத்தியாவசிய நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க சுகாதார சங்கங்களும் தீர்மானித்துள்ளன.  

எனினும் இன்று காலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!