7 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பிரதான வீதி

#SriLanka #Badulla #Road #Rescue #Reopen #lanka4Media #lanka4.com #bandarawela #landslide
Prasu
2 years ago
7 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பிரதான வீதி

மண்சரிவு காரணமாக சுமார் 7 நாட்களாக தடைப்பட்டிருந்த பதுளை - பண்டாரவளை வீதி, போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி இன்று திறக்கப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.

 கடந்த 9ஆம் திகதி பதுளை - பண்டாரவளை வீதியில் 7 ஆவது மைல்கல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுமார் 7 நாட்களாக போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

வீதியை மூடும் வகையில் சரிந்து விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபை அகற்றி, பள்ளங்கள் மற்றும் விரிசல்களை சீர் செய்ததன் பின்னர், அந்த இடம் பயணிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதா என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சோதனையும் செய்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!