இளநீர் பறிக்க முற்பட்ட பாடசாலை மாணவருக்கு நேர்ந்த கதி
#SriLanka
#Death
#School
#Student
#Attack
#Electric
#lanka4Media
#lanka4.com
Prasu
2 years ago
ரத்தோட்ட கிராமப் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இளநீர் மரத்தில் ஏறி இளநீரை பறிக்க முற்பட்ட பாடசாலை மாணவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் இளநீர் பறிக்கச் சென்ற போது, மற்றுமொரு மாணவன் கொடுத்த மூங்கில் ஒன்று அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பியில் மோதி மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கம்டுவ - களுகல்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்படுகிறது.