நியூசிலாந்து வீரருக்கு கொரோனா தொற்று

#Covid 19 #Newzealand #Cricket #Player #Chennai #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
நியூசிலாந்து வீரருக்கு கொரோனா தொற்று

உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மீண்டும் கிரிக்கெட் உலகில் நுழைந்துள்ளது.

அதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் விலகியுள்ளார்.

சான்ட்னருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் முதல் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டிக்காக மிட்செல் சான்ட்னர் ஈடன் பார்க் செல்லமாட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இனிவரும் காலங்களில் அவர் கண்காணிக்கப்படுவார்”என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4