இலங்கையில் வரலாற்றில் இல்லாதளவு காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்வு!
#SriLanka
#prices
#Vegetable
#Lanka4
Mayoorikka
2 years ago
பேலியகொட புதிய மெனிங் வர்த்தக சந்தையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இன்று (16) கரட் விலை உள்ளிட்ட மரக்கறிகள் சிலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
இதன்படி ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 2000 ரூபாவாகவும் ஒரு கிலோ போஞ்சியின் விலை 1000 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 800 ரூபாவாகவும் விற்கப்படுவதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்பாராத அளவுக்கு அதிகரித்த மரக்கறி விலைகள் காரணமாக நுகர்வோர் மட்டுமின்றி வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.