ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார் மஹிந்த!
#SriLanka
#Mahinda Rajapaksa
#Election
#Lanka4
Mayoorikka
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வேட்பாளரை நிறுத்துவது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக மேலும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்களின் விருப்பங்களுக்கு கவனம் செலுத்தும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அமைப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.