தேயிலை பயிர்செய்கைக்கான உரங்களின் விலையை 2000 ரூபாவால் குறைக்க திட்டம்!

#SriLanka #prices #Lanka4 #Tea #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தேயிலை பயிர்செய்கைக்கான உரங்களின் விலையை 2000 ரூபாவால் குறைக்க திட்டம்!

தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து T 750, T 709 மற்றும் T 200 உரங்களின் விலை 2,000 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (16) இந்த தீர்மானத்தை எடுத்ததாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சந்தையில் கிடைக்கும் தேயிலை உரத்தின் விலை 50 சதவீதத்தால் குறைக்கப்படும். 

தற்போது சந்தையில் மேற்கூறிய உரங்களின் ஒரு மூட்டையின் விலை 13,000 ரூபாயை தாண்டியுள்ளது.  

இதனால், T 750 மற்றும் T 709 தேயிலை உரங்களின் மூட்டை ஒன்றின் விலையை 7,735 ரூபாவாக குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு சொந்தமான கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் இலங்கை உர கம்பனி ஆகியவற்றின் தலைவர் டொக்டர் ஜகத் பெரேராவிற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். 

ஒரு மூட்டை டி 200 உரத்தின் விலை 5,500 ரூபாய். இந்த உரச் சலுகை அனைத்து சிறு மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளதுடன், பாரியளவிலான தேயிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு மேற்கூறிய அனைத்து உர வகைகளையும் 9,735 ரூபாவிற்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4