கனடாவின் ஒட்டாவாவில் எதிர்வரும் நாட்களில் கடும் குளிர் எதிர்பாா்க்கப்படுகிறது

#Canada #weather #Cold #Lanka4 #எதிர்வு #லங்கா4 #குளிர் #Predictions #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 canada tamil news
கனடாவின் ஒட்டாவாவில் எதிர்வரும் நாட்களில் கடும் குளிர் எதிர்பாா்க்கப்படுகிறது

கனடாவின் ஒட்டாவாவில் கடும் குளிர் காரணமாக வீடற்றவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. ஒட்டாவாவில் இதுவரையில் ஏனைய இடங்களைப் போன்று இன்னமும் மிக மோசமான குளிருடனான வானிலை பதிவாகவில்லை.

 எனினும் எதிர்வரும் நாட்களில் மறை ஐந்து பாகை செல்சியஸை விடவும் அதிக குளிருடனான நிலைமையை எதிர்நோக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் முகவத்தின் வானிலை ஆய்வாளர் பீட்டர் கிம்பல் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் சராசரியாக மறை 9 பாகை செல்சியஸ் முதல் மறை 16 பாகை செல்சியஸ் வரையில் குளிர் நிலவும் என குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/1705481900.jpg

 கடும் குளிருடானான வானிலையில், வீடற்றவர்களுக்கு போதியளவு வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகரின் வீடற்றவர்களுக்கான தற்காலிக தங்குமிட வசதிகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4