களுத்துறை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி உயிரிழப்பு!

#SriLanka #Death #Prison #Lanka4 #prisoner #lanka4Media #lanka4.com
PriyaRam
2 years ago
களுத்துறை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி உயிரிழப்பு!

களுத்துறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி இன்று உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பாணந்துறை மோதரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சந்தேக நபர் சுகயீனம் காரணமாக கடந்த 14ஆம் திகதி களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்குள்ள வார்டு இலக்கம் 3 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

images/content-image/1705558060.jpg

உயிரிழந்த கைதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கடந்த 9ஆம் திகதி கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் 4 நாட்களில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

களுத்துறை வடக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலக்கவின் பணிப்புரைக்கு அமைய பல்வேறு முறைப்பாடுகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!