இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ்க்கு அறுவை சிகிச்சை

#Hospital #KingCharles #England #Surgery #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ்க்கு அறுவை சிகிச்சை

இங்கிலாந்து அரச பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ்.இவரது தாயார் அரசி இரண்டாம் எலிசபெத் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார்.

அதை தொடர்ந்து மூன்றாம் சார்லஸ் அரசராக பதவி ஏற்றார். 

அப்போது அவருக்கு வயது 73. சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சினையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில், அடுத்த வாரம் இந்நோய்க்கான சிகிச்சைக்காக அரசர் சார்லஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டது. 

தற்போது ஆபத்தில்லாத நிலையில் உள்ள இந்நோய்க்காக சிகிச்சை பெறுவார் என தெரிவித்த அந்த அறிக்கையில், சிகிச்சை முறைகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4