வீட்டுத்திட்ட நிதியை விரைவாக வழங்கக் கோரி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

#SriLanka #Protest #Kilinochchi #District #LANKA4 #House
Abi
56 minutes ago
வீட்டுத்திட்ட நிதியை விரைவாக வழங்கக் கோரி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 50 இலட்சம் ரூபா வீட்டுத்திட்டத்தின் இடைநிறுத்தப்பட்ட கொடுப்பனவுகளை விரைவாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறித்த வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் ஆரம்பக் கட்ட நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த நிலையில், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டன.

இதனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் தமக்கான எஞ்சிய நிதியை விரைவாக வழங்குமாறு கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் தற்காலிகமாக வசித்து வந்த வீடுகளையும் சிலர் அகற்றியுள்ளதால், நிரந்தர வீடுகளும் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

எனவே, தங்களுக்குச் சேர வேண்டிய எஞ்சிய வீட்டுத்திட்டக் கொடுப்பனவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கான எஞ்சிய கொடுப்பனவுகளை எதிர்வரும் வாரத்திற்குள் மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து, தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பயனாளிகள் காத்திருக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!