அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்பிற்கு அழைக்க தீர்மானம்!

#SriLanka #Colombo #Lanka4 #union #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்பிற்கு அழைக்க தீர்மானம்!

அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளையும் கொழும்புக்கு வரவழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த வார இறுதியில் இறுதித் தீர்மானம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கங்களின் பொது மாநாடு தெரிவித்துள்ளது.  

கல்வி ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க பொது மாநாடு நேற்று (18.01) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

 இன்று முதல் வழமை போன்று பல்கலைக்கழகங்களின் சேவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதாகவும், தனது எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து வார இறுதியில் இறுதி முடிவு எடுப்பதாகவும் அதன் இணைச் செயலாளர்  கே.எல்.டி.ஜி ரிச்மண்ட்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4