இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமையை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று!

#SriLanka #Election #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
2 years ago
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமையை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (21.01) திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.  

பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் அவருக்கு உதவியாளர்களாக வடக்கு, கிழக்கு மாகணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டுப்பேரும் செயற்படவுள்ளனர்.  

அவர்கள் அனைவரும் தலைமைக்கு போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளர்களையும் ஆதரித்து முன்மொழிவுகளைச் செய்யாதவர்களாகவும் அதேநேரம் பொதுச்சபையில் வாக்களிப்பு அந்தஸ்தைக் கொண்டிருக்கதவர்களாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்டங்களில் இருந்து பொதுச்சபைக்கு வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைக் கொண்டவர்களுமாக 336பேருக்கு அதிகமானவர்கள் வாக்களிக்கவுள்ளனர்.  

முன்னதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கான வேட்பு மனு கோரப்பட்டபோது கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றம் சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனும் விண்ணப்பங்களை செய்திருந்தனர்.  

எனினும் கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் போட்டியின்றி தலைமைத்தெரிவு நடைபெறவேண்டுமென்று கருத்து வலியுறுத்தப்பட்டதை அடுத்து மூன்று வேட்பாளர்கள் இடையேயும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.  

அந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் புதிய தலைமைக்கு வாக்கெடுப்பை நடத்துவதே பொருத்தமானது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4