அயலானை கண்டு களித்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் நடித்த மேலும் அயலான் - 2 உருவாகவுள்ளது

#Cinema #Actor #TamilCinema #Film #Lanka4 #திரைப்படம் #லங்கா4 #தமிழ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
அயலானை கண்டு களித்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் நடித்த மேலும் அயலான் - 2 உருவாகவுள்ளது

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

images/content-image/1706022420.jpg

 கச்சிதமான விஎஃப்எக்ஸ் காட்சிகளால் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை தாண்டி வசூலித்து வருகிறது. இந்நிலையில், படத்துக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படத்துக்கு வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைத்த ஃபாண்டன் எஃப்.எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 படத்தின் தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸுடன் இணைந்து ‘அயலான்’ இரண்டாம் பாகத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் சீக்வலாக உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4