தக் லைப் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

#Cinema #TamilCinema #today #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
தக் லைப் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. ‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 

ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

images/content-image/1706091145.jpg

 இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. இதற்கான அப்டேட்டை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிடும் என்று தெரிகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4