கனடாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் - 6 பேர் பலி

#Death #Flight #Canada #Accident #Passenger #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
கனடாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் - 6 பேர் பலி

கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு சிறிய பயணிகள் விமானம் புறப்பட்டது. 

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்துடனான தொடர்பு துண்டானது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

மீட்புக்குழுவினர் பாராசூட் மூலம் சென்று தேடினர். அப்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

 இந்த விமான விபத்தில் 6 பேர் பலியானார்கள். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து விசாரணை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஒரு குழுவை நியமித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!