விபத்துக்குள்ளான ரஷ்யாவின் விமானம் : பேச்சுவார்த்தை நடத்த வரும் ஐ.நா பாதுகாப்பு சபை!
ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவால் போர் கைதிகளாக பிடிக்கப்பட்ட 65 உக்ரைன் இராணுவ வீரர்கள் இறந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
விமானத்தில் மொத்தம் 74 பேர் இருந்ததாகவும் அது விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. அந்த 65 போர் கைதிகளை உக்ரைனிடம் ஒப்படைத்து விட்டு, அதற்கு பதிலாக உக்ரைன் கைது செய்துள்ள ரஷ்ய இராணுவ வீரர்களை மீட்க திட்டமிட்டிருந்தாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், விமானம் விபத்துக்கு உள்ளானது தொடர்பாக கலந்துரையாட அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை கூட்டுமாறு ரஷ்யா, ஐக்கிய நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.