2023ம் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதை தட்டி சென்ற விராட் கோலி

#Cricket #sports #Player #Award #Indian #ICC #lanka4Media #lanka4.com #ODI
Prasu
2 years ago
2023ம் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதை தட்டி சென்ற விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

அதன்படி 2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. 

அதில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 இந்நிலையில், 2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4