இலங்கையை ஆளப்போவது ஜேவிபியா? உண்மை என்ன? நடக்குமா?

#SriLanka #Sri Lanka President #Election #Parliament #Protest #Sajith Premadasa #Ranil wickremesinghe #Lanka4 #President #AnuraKumara #jvp
Lanka4
9 months ago
இலங்கையை ஆளப்போவது ஜேவிபியா? உண்மை என்ன? நடக்குமா?

உலகளாவிய ரீதியிலே பல நாடுகளில் போர், போர் அச்சம், தொற்று நோயின் நீடிப்பால் பொருளாதாரம் முடங்கி சேடம் இழுத்துக்கொண்டிருக்கிறது. 

 அவ்வகையில் அதற்குள் வலையில் மாட்டிய எலியாக கடன், வறுமை மற்றும் ஊழலுக்குள் இலங்கையும் அகப்பட்டுள்ளமை ஒன்றாகும். இலங்கையை பொறுத்தவரையில் முடிசூடா மன்னனாக ரணில் இருக்கிறார். 

 இவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் உலகம் முழுவதும் கடன் பெற்றாலும் மக்கள் சிறிது மூச்சு விடகூடியதாக உள்ளது. இப்பொழுது கேள்வியே யார் அடுத்த ஜனாதிபதியாக வந்தால் மக்களின் பிரச்சனை தீரும் அல்லது முன்னேற்றம் அடையும் என்பதே. அதை நிர்ணயிக்கும் வகையில் புதிய உளவு செய்தியென ஒரு தவறான செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. 

அதுதான் #JVP அடுத்த ஜனாதிபதி தேர்தலில்   கட்டாயம்  வெல்லும் என்பதே. இச்செய்தி சில வாரத்தின் முன்னர் #lanka4 இற்கு எமது உளவு ஊடகப்பிரிவால் இச்செய்தி வந்து அதனை நாம் எமது ஊடக செய்தி பொறுப்பாளரின் அறிவுறுத்தலின் கீழ் அச்செய்தியை சில அதாரபூர்வமாக ஆய்வு செய்து தவறான கணிப்பு என்பதால் பிரசுரிக்கவில்லை.

 #JVP கட்சியை பொறுத்தவரையில் இப்பொழுது இலங்கை இருக்கும் நிலையில் அதிகம் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டதால் ஆர்ப்பாட்டம் தட்டிகேட்பு போன்ற விடையங்களுக்கு அவர்களும் பின்னால் நிற்ப்பார்கள் நிற்கிறார்கள். 

 ஆனால் ஆட்சி அதிகாரம் என்ற வகையில் மக்கள் #JVP கட்சியை அரியாசனத்தில் வைக்க இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும். #JVP கட்சிக்கு இடமே இல்லை. அதை சிங்கள சமூகமும் ஏற்றுக் கொள்ள மாட்டாது.

 உதாரணத்துக்கு தமிழ் கட்சிகளை எடுத்துக்கொண்டால் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் 65 சதவீதமானவர்கள் வாக்களிக்கும் தகமையில் இருந்தும் மக்களின் வாக்கு தமிழரசுக் கட்சிக்கும் மற்ற கட்சிக்குமே கிடைக்கின்றன.

 வாக்களிப்பவர்களில் பலர் கஜேந்திரகுமார் கட்சிக்கு வாக்கு போடுவது குறைந்துவிட்டது. அவ்வகையில் தமிழர்கள் யாருமே #JVP கட்சிக்கு அதரவு செய்யமாட்டார்கள். 

தமிழ் கட்சிகளும் யாரும் ஆதரவு இல்லை. இஸ்லாமிய கட்சிகளும் தமிழ் மக்களைப்போலவே #JVP கட்சியை பிடித்தாலும் ஆதரவு அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

 அப்படி பார்த்தால் தமிழ் கட்சிக்குள் இப்பொழுது EPDP கட்சி பல சேவைகளை இரவு பகலாக செய்கின்றது. அனால் மக்கள் அவருக்கு அதிகம் 2 ஆசனத்தையே கொடுக்கிறார்கள். 

 #JVP முன்னின்று இலங்கையை தூக்கி நிறுத்தினாலும் அவர்களை மக்கள் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ஒரு எதிர்க்கட்சியாகவோ எற்றுக்கொள்ளும் மனப்போக்கு வரவில்லை. 

 அப்படி மக்கள் மாறினாலும். ஜனநாயகத்தினை நிர்ணயிப்பது அமெரிக்கா தொடக்கம் ஆபிரிக்கா வரையிலும் பண நாயகமே. அது சஜிதிடமோ #JVP இடமோ கிடையாது. அப் பலம் ராஜபக்சே குடும்பத்திடமும் அவர்களின் நிழல் ரணிலிடமும் தான் உண்டு. 

 ஆம். இங்கையின் அடுத்த தேர்தலில் வெல்லப்போவது ஜனநாயகம் அல்ல பண நாணயமே. அவர்களுக்கு பண அனுசரணை செய்ய இரண்டு புலம்பெயர் முதலீட்டாளர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். 

 அதே போலத் தான் சஜித் தரப்பினருக்கும் ஆதரவு கிடைக்கின்றமை குறைவாகவே உள்ளது ஏனெனில் சஜித்திற்கு ஒருசில தமிழ் கட்சியின் ஆதரவு இருப்பதால் சிங்கள மக்களிடையே தமிழ் கட்சிக்கு எந்தவொரு கட்சி ஆதரவு செலுத்துகின்றதோ அக் கட்சி தமிழர்களின் கோரிக்கைக்கு ஆதரவு வழங்குவதால் அந்தக் கட்சிக்கு சிங்கள மக்களின் ஆதரவு கிடைக்கின்றமை அரிதாகவே காணப்படுகின்றது. 

அந்த நிலையில் அடுத்த தேர்தலில் ரணில் அல்லது ராஜபக்ஸ வெற்றியடைவதற்கு அதிகப்டியான சாத்தியங்கள் இருப்பதாகவும் ரணில் ராஜபக்சவினருடன் இருப்பதால் ரணில் வந்தாலும் சரி ராஜபக்ச வந்தாலும் சரி அது ராஜபக்ச ஆட்சியாகவே இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றன. 

 இது #lanka4 ஊடகத்தின் ஆய்வுச் செய்தி. 

 இச்செய்தியின் ஆய்வு பிடித்தவர்கள் மற்றவர்களுக்கும் அனுப்பவும். எமது முகநூலை லைக் செய்யவும். யூட்டூப் சணலை மறக்காமல் சப்கிறைப்  செய்யவும்.

 ஆம் நல்லவனுக்கு அரசியல் வியாபாரத்தில் இடம் இல்லை. மக்களே நீங்கள் உங்களை உயர்த உங்கள் துயர் துடைக்க நீங்கள்தான் பாடுபடுங்கள். உங்களுக்கு யாரால் நன்மை உண்டோ அவர்களுக்கு வாக்களியுங்கள். இக்காலத்தின் போக்கில் வாழ முயலுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!