தனுஸ்கோடியையும், மன்னாரையும் இணைக்கும் பாலத்திற்கு இராமர் பாலம் என பெயர் சூட்ட திட்டமா?
இந்தியாவில் மோடி ஆட்சியில் இந்துத்துவாக்கம், இராமர் என கோசங்கள் பரவலாக முழு இந்தியாவிலும் பேசப்படுகிறது.
அதன் அடிப்படையில் பல எதிர்ப்புகளுக்கும், உயிர் இழப்புகளுக்கும் மத்தியில் அயோத்தி இராமர் கோவில் கட்டி கும்பாவிசேடமும் முடிந்தது. அது ஒரு வணக்கத்தலம் என்பதைவிட உல்லாச பிரயாணிகளைக் கவரும் இடமாகவும் ஆன்மீகத்துக்கும் வருமானத்திற்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.
அடுத்தது மோடியின் பார்வை தமிழ் நாட்டின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்காக தமிழ் நாட்டில் அவர் தனது கட்சியின் வளர்ச்சிக்கு அண்ணாமலை என்ற விருட்சத்தை நாட்டியுள்ளார். இருந்தும் மோடிக்கும் அண்ணாமலைக்கும் எதிர்பார்த்த வெற்றியை பெற திராவிடர் கட்சிகள் ஒரு பெரிய மலையாக முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.
அதற்கு கணிசமான அளவு சீமானும் தடையாக இருக்கிறார். அதை பொடிபொடியாக்க இலங்கைத் தமிழர் ஆதரவும், உதவியும் தேவை. அதை குறிவைத்து பல அபிவிருத்தியிலும், அசைவுகளிலும் பங்களிப்பு செய்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் பல அரசியல்வாதிகள் தொடக்கம் வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்கள், ஆன்மீகவாதிகள் என பலரை தனது வலைக்குள் போட்டுள்ளது. அதை துரிதப்படுத்தவே சில மாதங்களுக்கும் முன்னர் அண்ணாமலை மற்றும் BJP கட்சியினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்கள்.
அதன் அடுத்த நடவடிக்கையாக இப்பொழுது மோடி இராமர் பாலத்தை கட்டி அதிகமான மக்களை இணைக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. அதற்காக ரணில் அரசுடனும் பேச்சு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. பாலம் கட்டும் திட்டத்துக்கு பல பூகோள சிக்கல் இருந்தாலும், இலங்கையும் ஒரு பங்கு முதலீடு செய்யவேண்டும்.
தன் கடல் எல்லைவரை இந்தியா முதலீடு செய்யுமாம். சிலவேளைகளில் இந்தியாவே முழுமையாக முதலீடு செய்தால் அது இந்திய கட்டுப்பாட்டிற்குள்ளும், ஆதிக்கத்திற்குள்ளும் வருவதற்கான சாத்தியம் உள்ளது. அதை இலங்கையை தன் கைக்குள் வைத்திருக்கும் சீனா விரும்பாது. எனவே சீனா மறைமுகமாக இலங்கைக்கு உதவ முன்வர வேண்டி தேவை உண்டு.
அது ஒரு புறம் இருக்க இவ்விடத்தில் இராமர் பாலம் இருந்ததாக நம்பும், அல்லது கூறும் இந்துக்கள் அதற்கு இராமர் பாலம் என்ற பெயரையே வைக்க விரும்புவார்கள் என்பதால் மோடி அரசு அடுத்த இராமாயண புராணத்தை இலங்கையை நோக்கி பாடவிருப்பது நிஜம்.
எது எவ்வாறாக இருப்பினும் முதலில் கடலின் தன்மையை வைத்து பாலம் கட்டுவதற்கு என்ன சிக்கல்கள் உள்ளன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதன் பின்னரே அதற்கு இராமர் பாலாமா? இராவணன் பாலாமா?, இராம இராவணன் பாலமா? என்பதை முடிவு செய்யலாம்.
இது #lanka4 உடக பிரத்தியேக ஆய்வுச் செய்தி.