வென்றது கார்த்திகைப் பூ , இதனால் தமிழும் வென்றது - கனடாவில் வாழும் தமிழ்
#Hindu
#Canada
#Tamil People
#Flower
#Canada Tamil News
#Religion
#cultural
Prasu
1 year ago

தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்ததும், தமிழீழத் தேசிய மலராக தேசியத் தலைவர் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு, மாவீரத் தெய்வங்களுக்கு தூவி வணங்கும் தமிழர்களின் வழிபாட்டுக்குரிய கார்த்திகைப் பூவை, சைவநெறிக்கும், ஐயப்ப வழிபாட்டு நெறிக்கும், எதிராக செயற்படும் கனடா ஐயப்பன் கோயிலின் நிர்வாகத்தினரின் கார்த்திகைப் பூ அவமதிப்பை, துணிச்சலோடு எதிர்த்து, வழக்குத் தாக்கல் செய்து, வழக்கில் வென்றி பெற்ற கனடாவாழ் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களில் இளையவரான திரு. கார்த்திக் நந்தகுமார் அவர்களுக்கு தமிழர்கள் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
‘எமது இனத்தின் தேசிய ஆன்மாவைச் சிதைக்கும் வகையிலான செயற்பாடுகளை, துணிந்து எதிர்த்து தேசிய அடையாளங்களை பாதுகாப்போம்’



