மார்ச் 21 தேசிய கடற்படை தினமாக அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மார்ச் 21 தேசிய கடற்படை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
நாட்டின் உள்ளூர் பொருளாதாரத்திற்கு கடற்தொழிலாளர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதும், கடல்வழி தொழிலில் ஆர்வமுள்ளவர்களை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும்.
இதன்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21 ஆம் திகதியை தேசிய மாலுமிகள் தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.