புஷ்பா பட வெற்றியைத் தொடர்ந்து ஆகஸ்ட் வெளிவரும் புஷ்பா - 2
#Cinema
#TamilCinema
#Film
#release
Mugunthan Mugunthan
1 year ago

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படம் வெற்றிபெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை உருவாக்கி வருகின்றனர்.இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
ஆக.15-ம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட இருக்கின்றன. இதற்காக படக்குழு விரைவில் அங்கு செல்ல இருக்கிறது.



