கனடாவில் தபாற் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது

#Canada #prices #Canada Tamil News #Postal
கனடாவில் தபாற் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது

கனடாவில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய தபால் திணைக்களம் இவ்வாறு கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.

 தபால் முத்திரைகளின் விலைகள் 7 சதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் சர்வதேச தபால் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 உள்நாட்டு தபால் மற்றும் பதிவுத் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி முதல் இவ்வாறு கட்டண அதிகரிப்பு பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

 பணவீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை கவனத்திற் கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!