சிவகார்த்திகேயனின் 21வது படமான எஸ்கே21 படத்தின் டீசர் அவரது பிறந்தநாளில் வெளிவருகிறது

#Cinema #Actor #TamilCinema #Birthday #release
சிவகார்த்திகேயனின் 21வது படமான எஸ்கே21 படத்தின் டீசர் அவரது பிறந்தநாளில்  வெளிவருகிறது

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் டைட்டில் மட்டும் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது 21-வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. 

இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். ‘எஸ்கே 21’ அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு 16-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1707750137.jpg

 சிவகார்த்திகேயனுக்கு 17-ம் தேதி பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள டீசர் அறிவிப்பு வீடியோவில், சிவகார்த்திகேயன் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மான்டேஜாக காட்டப்படுகிறது. 

மேலும், அதில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொள்ளும் காட்சிகளும் வந்து செல்கின்றன. பின்னணியில் ராப் பாடல் ஒன்றும் ஒலிக்கிறது. வீடியோவில் முடிவில், “Soldires body; Herosheart” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ மூலம் சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கதாபாத்திரத்துக்கு உடலை வருத்தி தயாராகியிருப்பதை உணர முடிகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4