உலகம் போற்றும் காதலர் தினம் இன்று : உண்மையில் காதல் என்றால் என்ன? பாலியல் ஈர்ப்பா அல்லது அன்பா?

#SriLanka #Article #Tamilnews #sri lanka tamil news #valentine
Dhushanthini K
9 months ago
உலகம் போற்றும் காதலர் தினம் இன்று : உண்மையில் காதல் என்றால் என்ன? பாலியல் ஈர்ப்பா அல்லது அன்பா?

இந்த உலகத்தின் மூச்சுக்காற்று எது தெரியுமா? எத்தனையோ போர்கள், இயற்கை பேரிடர்கள், இன்னும் சொல்லென்னா துயரங்களுக்கு மத்தியில் இந்த உலகம் எதனால் இயங்குகிறது தெரியுமா? எதற்காக ஒவ்வொரு உயிரும் போராடுகிறது தெரியுமா? இப்படி சொல்லும்போது நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் தான் நினைவில் வந்துபோகிறது. “ எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும், அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்” இந்த வரிகள் போல்தான் காதல்.

எத்தனை சோகங்கள், எத்தனை அழிவுகள், எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இந்த உலகத்தில் மாறாத ஒரு விடயம் தான் காதல். தற்போது உள்ள 2K கிட்ஸுக்கு காதல் என்பதன் சரியான பொருளும், அதன் முக்கியத்துவமும், புரியவில்லை என்றாலும், 80,90 களில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதாவது காதலர் தினம் முக்கியமான ஒன்றுதான். 

images/content-image/1707884993.jpg

பொதுவாக ஆரம்பகாலங்களில் ஆதாம், ஏவல் காலம் தொட்டே இந்த காதல் என்ற ஒரு விடயம் பிறந்ததாக சொல்லப்படுகிறது. படங்களிலும், கதைகளிலும் நாமும் அதை கேள்விபட்டிருப்போம். ஆனால் உண்மையில் இந்த அற்புதமான விஷயம் எப்போது தோன்றியது என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. 

காலமாற்றத்திற்கு ஏற்ப காதலும் தன்னை உருமாற்றிக்கொண்டது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். சங்ககாலம் தொட்டு தற்போதைய கலி காலம் வரையில் காதல் ஒவ்வொரு பெயருடன் தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளது. ஆனால் அதன் பொருள் எல்லாம் ஒன்றுதான். அப்படிதான் இந்த காதலர் தினமும் தோற்றம் பெற்றது,

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் காதலை தற்காத்துக்கொள்வதும் முக்கியம். அப்படியாக தற்போது காதலானது  பாலியல் ஈர்ப்பாக பார்க்கப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஏன் என்றால் ஒருகாலத்தில் புனிதமாக பார்க்கப்பட்ட ஒன்று, இன்று பாலியல் ரீதியிலான ஒரு விடயமாக திரிபடைந்துள்ளது. 

images/content-image/1707883181.jpg

நீங்கள் எத்தனையோ காதலர்களை தற்காலத்தில் காணலாம். ஆனால் அவர்களில் எத்தனைபேர் திருமணம் வரை செல்கிறார்கள் என்பது கேள்விகுறிதான். யார் வேண்டும் என்றாலும், யாரை வேண்டும் என்றாலும் காதலிக்கலாம். ஆனால் திருமணம் என்று வரும்போது காதல் காணாமல்போகிறதோ என்ற யோசனை எழுகிறது. 

தற்காலத்தில் காதலிப்பர்கள் பலர் தங்களுடைய தகுதிக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தெரிவு செய்ய பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு தொழில், வருமானம், ஆடம்பர வாழ்க்கை, கல்வி அறிவு இப்படி பல விடயங்களை யோசனை செய்துதான் காதலிக்கவே ஆரம்பிக்கிறார்கள். ஆக இங்கு காதலும் வியாபாராம் ஆக்கப்பட்டு விட்டது. வரதட்சனை என்ற பெயரில் திருமணமும் வியாபாரம் ஆக்கப்பட்டது. 

இவை எல்லாவற்றையும் விட தங்களுடைய பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள காதல் என்ற பெயரை பயன்படுத்துகிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது. பலருடைய வாழ்க்கை இங்க அப்படியாகத்தான் இருக்கிறது. எது எப்படியோ காதல் என்றால் என்ன என்பதை சற்று சிந்தித்து செயற்படுங்கள். காதல் என்ற போர்வையில் அரங்கேறும் அத்துமீறல்களுக்கு அனுமதிக்க வேண்டாம். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒரு உறவில் இருக்கும்போது உங்களுடைய வரையறையை தெரிந்துகொண்டு பழகுங்கள். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!