இலங்கை வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

#weather #Rain #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று 915.02) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அறிவிப்பின்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் 

ஒரு சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மத்திய மலைநாட்டின் கிழக்கு பாவும் பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றானது மணிக்கு 30-40 கி.மீ   வேகத்தில் வீசக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

 இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4