சமூக வலைத்தளங்களில் வைரலான மேரி மரியாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

#SriLanka #Colombo #Social Media
Mayoorikka
2 years ago
சமூக வலைத்தளங்களில் வைரலான மேரி  மரியாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

சமூகவலைத்தளங்களில் அண்மையில் கந்தானை நகரில் மரியாள் போன்று உடையணிந்து சுற்றித் திரிந்த பெண் தொடர்பான காட்சிகள் சமூகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. 

 குறித்த பெண் யார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகியுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர். 

 கடந்த சில நாட்களாக கந்தானை நகரில் வெண்ணிற ஆடை அணிந்து உலா வந்த இவர் தொடர்பில் சமூகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 

அவர் ஒரு வெளிநாட்டுப் பெண் என்று சந்தேகிக்கப்படலாம் என்றும், மரியாளின் சாயலைச் சித்தரிப்பதாகவும் சிலர் கூறினர். அதற்கமைய, அவர் யார் என்பதனை அறிய மக்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

 இதனடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸார் அவர் ரஷ்ய பெண் என, விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அவர் இந்த நாட்டிற்கு வந்து பௌத்த தியான முறைகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 

 அவர் கத்தோலிக்க பெண்ணாக இருந்தாலும் பௌத்த தத்துவத்தை பயின்று வருவதாகவும், இதனிடையே கந்தானை பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4