பிரான்ஸ் மெட்ரோ இரயிலில் ஏற முற்பட்ட நடுத்தர வயது நபர் காலை முறித்துக்கொண்டார்
#France
#MetroTrain
#Injury
#France Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

நேற்று பிரான்ஸில் மெட்ரோ இரயில் கதவில் ஏற முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து தனது கால்களை முறித்துக்கொண்ட சம்பவம் பரிஸி மெட்ரோ நிலையத்தில் நடந்துள்ளது.
நள்ளிரவு 12.25 மணி அளவில் குறித்த மெற்றோ நிலையத்துக்கு வருகை தந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், நிலையத்தின் முகப்பு வாயிலில் ஏற முற்பட்டுள்ளார். கதவின் உச்சியில் ஏறிய அவர், அங்கிருந்து தவறி விழுந்துள்ளார்.
இதனால் அவரது கால்களில் முறிவு ஏற்பட்டு பின்னர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



