பிரான்ஸ் விமானமான எயர் பிரான்ஸிற்கு வர்ணம் பூசிய கும்பலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

#France #gammanpila #AirCraft #France Tamil News #Fined
பிரான்ஸ் விமானமான எயர் பிரான்ஸிற்கு வர்ணம் பூசிய கும்பலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

எயார் பிரான்ஸிற்கு சொந்தமான விமானமொன்றிற்கு வர்ணம் பூசிய ஒரு கும்பலுக்கு நீதிமன்றம் குற்றப்பணம் அறவிட்டுத் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் கும்பலில் ஒன்பது பேர் இருந்துள்ளனர். இவர்களிற்கு €700-€1200 யூரோக்கள் வரை குற்றப்பணத்தை நேற்று புதன்கிழமை பொபினி நகர நீதிமன்றம் (Seine-Saint-Denis) அறவிட்டது.

 அத்தோடு அவர்களை Roissy மற்றும் Boueget நகர விமான நிலையங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தம்மை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என அடையாளம் காட்டியுள்ளனர்