பிரான்ஸில் ஆறாம் மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் பலியானான்

#France #Building #France Tamil News
Mugunthan Mugunthan
3 months ago
பிரான்ஸில் ஆறாம் மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் பலியானான்

சிறுவன் ஒருவர் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இருந்து விழுந்து பலியாகியுள்ளார். பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது. 

8.30 மணி அளவில் அவரசப் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 15 வயதுடைய சிறுவன் ஒருவர் அவர் வசிக்கும் ஆறாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். 

படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். சம்பவத்தின் போது சிறுவனின் சகோதரனும் அவர்களது தாயாரும் வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.