கனடாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை

#Canada #Warning #Canada Tamil News
Mugunthan Mugunthan
9 months ago
கனடாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்படுத்தக் கூடிய ஆபத்து தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களினால் சமூகத்திற்கும், அவர்களுக்கும் பாரிய ஆபத்துக்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 குற்றப் பின்னணி அண்மையில் கியூபெக் மாகாணத்தின் வாடுறுயில் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் மொஹமட் இம்டியாஸ் என்ற நபர் தனது மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரினால் தனது மனைவி கொடூரமாக தாக்கப்பட்தாகத் தெரிவித்துள்ளார். மேலும், குடியிருப்பில் வசித்து வந்த இரண்டு பெண்களை குறித்த நபர் கொலை செய்திருந்தார். வீட்டின் கதவை திறந்து வெளியே சென்ற தனது மனைவியையும் அவர் கொடூரமாக தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

 இதேவேளை, இந்த தாக்குதல் மேற்கொண்ட நபர் ஏற்கனவே குற்றப் பின்னணியுடையவர் எனவும் மனநலம் பாதிக்கப்பட்ட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நபர்களினால் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படக் கூடும் எனவும், இது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!