எலிசே மாளிக்கைக்குள் பெற்றோல் தாங்கியுடன் பிரவேசிக்க முற்பட்ட நபர் கைது

ஜனாதிபதி மாளிகையான எலிசே மாளிகைக்குள் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் இலத்திரனியல் காப்பு அணிந்திருந்ததாகவும், அவர் காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் Angers (Maine-et-Loire) நகரச் சேர்ந்தவர் எனவும், பல்வேறு குற்றச்செயல்களின் ஈடுபட்டிருந்ததால், அவர் குறித்த நகரை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது எனவும், நேற்றைய தினம் தடையை மீறி பரிசுக்கு வருகை தந்துள்ளதாகவும், எலிசே மாளிகையின் வாசலுக்கு வருகை தந்த அவர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை பார்க்கவேண்டும் என கோஷமிட்டதாகவும் அறிய முடிகிறது.
மகிழுந்து ஒன்றில் வந்த அவர் அதனுள்ளிருந்த பெற்றோல் தாங்கியை எடுத்த போது விரைவாக செயல்பட்ட காவல்துறையினரால் அது தடுக்கப்பட்டு உடனடியாக குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.



