கனடாவில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா?

#Canada #Security #Canada Tamil News #Spy
Mugunthan Mugunthan
9 months ago
கனடாவில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா?

கனடாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அதன் புலனாய்வுச் சேவையின் முன்னாள் நிறைவேற்று முகாமையாளர் டான் சான்டோன் தெரிவித்துள்ளார்.

 புலனாய்வுப் பிரிவுகளில் பணியாற்றுவோரினால் தகவல்கள் கசிய விடப்படுவதே தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளார். உள்ளிருந்து பகிரப்படும் தகவல்கள் மிகவும் ஆபத்தானவை என சுட்டிக்காட்டியுள்ளார்.

 அண்மையில் கனடாவின் காவற்துறை சேவையின் புலனாய்வு அதிகாரி கெமரூன் ஒட்டிஸ் என்பவருக்கு இரகசியங்களை பகிர்ந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 கனடாவின் பாதுகாப்பு தகவல் சட்டத்தின் கீழ் முதல் தடவையாக இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான இரகசியங்கள் வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடிய பாரிய ஆபத்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே பாதுகாப்பு நிறுவனங்கள்  பணத்திற்காகவோ அல்லறு வேறு காரணிகளுக்காகவோ தகவல்களை கசியவிடுவதனை தடுக்க வேண்டும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!