பிரான்ஸில் 36.5 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்த போலி வியாபார கும்பல் கைது

#Arrest #France #Bussinessman #France Tamil News #Fraud
பிரான்ஸில் 36.5 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்த போலி வியாபார கும்பல் கைது

போலியான விளம்பரங்களை மேற்கொண்டு பணமோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் மொத்தமாக €36.5 மில்லியன் யூரோக்கள் பணத்தினை மோசடி செய்துள்ளனர். பல்வேறு ஊடகங்களில் போலியான விளம்பரங்களை வெளியிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

 இதற்கு இரு சகோதரர்கள் தலைமையாக செயற்பட்டு திட்டமிட்டு இந்த மோசடியை மேற்கொண்டுள்ளனர். Perreux-sur-Marne, Bry-sur-Marne (Val-de-Marne) நகரங்களை தலைமையாக கொண்டு அவர்கள் இயங்கிவந்துள்ளனர்.

 அவர்கள் காணி நிலம் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தியதாகவும், அதன் மூலமாக பணத்தினை மோசடி செய்ததாகவும், கடந்த பல ஆண்டுகளில் அவர்கள் மேற்படி பணத்தொகையை மோசடி செய்ததாகவும், பல ஆயிரம் மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இரு சகோதர்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 140 - Grands Crus Classés மதுபான போத்தல்கள், 33 ஆடம்பர கைக்கடிகாரம், விலையுயர்ந்த ஆடைகள், 110,000 யூரோக்கள் ரொக்கப்பணம், பல மகிழுந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!