நோட்டோவில் இணைய ஸ்வீடனுக்கு ஒப்புதல் அளித்த ஹங்கேரி பாராளுமன்றம்

#Prime Minister #Parliament #Swedan #NATO #Hungary
Prasu
9 months ago
நோட்டோவில் இணைய ஸ்வீடனுக்கு ஒப்புதல் அளித்த ஹங்கேரி பாராளுமன்றம்

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள் ஒன்றிணைந்து அமைத்த அணி நேட்டோ (North Atlantic Treaty Organization). 

நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டை வேறொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து அந்த நாட்டிற்கு ஆதரவாக நிற்கும். நேட்டோ அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டும்.

சுமார் 200 வருடங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.

2022ல் உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்த பிறகு ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது. ஆனால், ஸ்வீடன் தனக்கு எதிரான நாடு எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது.

இந்நிலையில், ஹங்கேரி தனது நிலையை மாற்றி கொண்டது. ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orban), "இரு நாடுகளும் ஒருவருக்காக மற்றொருவர் இறக்கவும் தயாராக உள்ள நாடுகள்" எனக் கூறி ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

ஹங்கேரியின் ஒப்புதல் குறித்த தகவல் வந்த நிலையில் நேற்று ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் க்ரிஸ்டர்ஸன் (Ulf Kristersson) மகிழ்ச்சி தெரிவித்தார்.

 ஹங்கேரியின் இந்த முக்கிய முடிவு குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க், "நேட்டோ, முன்னை காட்டிலும் வலுவான மற்றும் பாதுகாப்பான அமைப்பாகவும் மாறி விட்டது" என (Jens Stoltenberg) தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!