பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் பாதுகாப்பு தகவலடங்கிய கணனி திருட்டு

#France #information #stealing #France Tamil News #Olympics
Mugunthan Mugunthan
2 months ago
பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் பாதுகாப்பு தகவலடங்கிய கணனி திருட்டு

பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஐந்து மாதங்களே உள்ளது. இந்நிலையில் போட்டிகள் தொடர்பான பாதுகாப்புத் தகவலடங்கிய கணனியொன்று தொடருந்தில் திருடப்பட்டுள்ளது,

 ஒலிம்பிக் போட்டிகளின் ஊழியர் ஒருவர், மடிக்கணணி ஒன்றும், usb கருவிகள் சிலவற்றுடனும் Gare du Nord தொடருந்து நிலையத்தில் இருந்து Creil (Oise) நகர் நோக்கி பயணித்துள்ளார். ஆனால் சில நிமிடங்களிலேயே குறித்த கணணி இருந்த பை திருடப்பட்டுள்ளது.

 பெப்ரவரி 26 ஆம் திகதி திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கணணியில் மிகவும் இரகசியமான உள்ளக பாதுகாப்பு தகவல்கள் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அவர் காவல்துறையினரை அழைத்துள்ளார். வழக்கும் பதிவு செய்துள்ளார்.

பயணிகளின் நெருக்கடிக்குள் காலை பயணம் செய்திருந்த அதனை வைத்திருந்த நபர் அவ்வேளையிலே அதனைப் பறிகொடுத்துள்ளதாக தெரிவித்தார்.