கனடாவில் குப்பைகளை சேகரிக்கும் பைகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

#Canada #people #urban council #Canada Tamil News
Mugunthan Mugunthan
9 months ago
கனடாவில் குப்பைகளை சேகரிக்கும் பைகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

கனடாவின் கான்வெல் நகரில் குப்பைகளைச் சேகரிக்கும் பைகள் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுவரை நிலவி வந்த கறுப்பு நிற பைகளிற்கு பதிலாகபிளாஸ்டிக் (Clear Plastic) பொதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

 இவ்வாறு வெளிப்படை தன்மையுடைய பிளாஸ்டிக் பொதிகளை பயன்படுத்துவது மக்களின் தனி உரிமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பையில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக காண்பிக்கும் வகையிலான பொதிகளை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் சரியான முறையில் குப்பைகளை பிரித்து போடுகின்றார்களா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

 எனினும் இவ்வாறு தெளிவான பிளாஸ்டிக் பைகளில் குப்பைகளை இடுவது தங்களது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் என சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

 நகரின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் நகர நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வோர் அல்லது குப்பைகளை திரட்டுவோர் பொதிகளில் என்ன இருக்கிறது என்பதனை பார்ப்பதற்கும் அவற்றை இலகுவில் வகைப்படுத்துவதற்கும் நகர நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இவ்வாறு குப்பைகளை சேகரிப்பதானது மக்களது தனி உரிமையை பாதிக்கிறது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!